ஆயக்குடியில் குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 24 மின் மோட்டார்கள் பறிமுதல்

ஆயக்குடியில் குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 24 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-07-08 16:22 GMT

பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடு, வணிக நிறுவனங்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வரதமாநதி அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என்று கூறி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் போராட்டம் நடத்தினர்.

மேலும் பேரூராட்சியில் பல்வேறு வீடுகளில் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதாகவும் புகார் வந்தது. இதையடுத்து இன்று பேரூராட்சி செயல் அலுவலர் மகேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 11, 17 ஆகிய வார்டுகளுக்கு சென்று வீடுகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது பல்வேறு வீடுகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 24 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மகேந்திரன் கூறுகையில், வரும் நாட்களில் பேரூராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளிலும் சோதனை செய்யப்படும். அப்போது மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது கண்டுபிடிக்கப்பட்டால் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்