கஞ்சா-லாட்டரி சீட்டுகள் விற்ற 24 பேர் கைது

கஞ்சா-லாட்டரி சீட்டுகள் விற்ற 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-11 20:45 GMT

போலீசார் சோதனை

திருச்சி மாநகரில் பாலக்கரை, காந்திமார்க்கெட், சிந்தாமணி, எடமலைப்பட்டிபுதூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் அந்த பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் மில் காலனியை சேர்ந்த டாக்கர்(வயது 69), ஜெயசீலன் (47), சிந்தாமணி பாபு (60), இ.பி.ரோடு பாக்யராஜ்(26), சிந்தாமணி செபஸ்டின் செல்வம் (54), பாலக்கரை ஏசு (55), முத்துக்குமார் (22) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பெண் உள்பட...

இதேபோல் திருச்சி மாநகரில் லாட்டரி புழக்கம் அதிகம் இருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகரில் அனைத்து பகுதிகளிலும் அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை துண்டு சீட்டில் எழுதி விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அஜ்புதீன் (28), பாத்திமா பீவி (47), மனோகர் (53), தர்மராஜ் (47), தியாகசுந்தரம் (63), பாபு (56), ராபர்ட் அர்னால்ட் (21), சண்முகம் (37), ஜாபர்அலிகான் (36), முகமது அலி ஜின்னா (48) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் திருச்சி பாலக்கரை மெயின்ரோட்டில் உள்ள மேம்பாலம் அருகே சிலர் லாட்டரி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், லாட்டரி விற்ற புதுக்கோட்டையை சேர்ந்த சூசை(40), பள்ளிப்பாளையத்தை சேர்ந்த அருண்பிரசாத்(24), கர்நாடக மாநிலம் ராய்ச்சூரை சேர்ந்த ஆரோக்கியசாமி, இளையான்குடியை சேர்ந்த ஜெகன்(22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதேபோல் காந்திமார்க்கெட் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் லாட்டரி விற்றதாக 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், ரூ.20 ஆயிரம், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்