தக்கலையில் அதிக பாரம் ஏற்றிய 8 லாரிகளுக்கு ரூ.2.36 லட்சம் அபராதம்

அதிக பாரம் ஏற்றிய 8 லாரிகளுக்கு ரூ.2.36 லட்சம் அபராதம்

Update: 2023-04-15 19:00 GMT

தக்கலை:

தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் நேற்று காலை தக்கலை பழைய பஸ் நிலையம், புலியூர்குறிச்சி ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக கேரள மாநிலத்திற்கு ஜல்லி, எம்.சாண்ட் மண் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு சென்ற டாரஸ் லாரிகளை நிறுத்தி சோதனையிட்டார்.

இதில் 8 லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பாரம் ஏற்றி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பாரத்தின் அளவை பொறுத்து அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த வகையில் 8 லாரிகளுக்கும் மொத்தம் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 540 அபராதம் வசூலிக்கப்பட்டு லாரிகள் விடுவிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்