23 பவுன் நகைகள்- 2 கிலோ வெள்ளி திருட்டு

கொள்ளிடம் அருகே வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபா்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-08-27 18:11 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபா்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

வேளாங்கண்ணிக்கு சென்றனர்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சி தண்ணீர் பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது51). இவர் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன்கள் மணிகண்டன், புகழேந்தி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

சம்பவத்தன்று ராமச்சந்திரன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டார். நேற்று மதியம் அவர் வீட்டுக்கு ஒரு லாரி டிரைவர் வந்தார். அவர் ராமச்சந்திரன் வீ்ட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ராமச்சந்திரனுக்கு தகவல் தொிவித்தார்.

23 பவுன் நகை திருட்டு

இதைத்தொடர்ந்து வேளாங்கண்ணியில் இருந்து ராமச்சந்திரன் குடும்பத்துடன் விரைந்து தண்ணீர்பந்தல் கிராமத்துக்கு வந்து வீட்டுக்குள் சென்று பாா்த்தாா். அப்போது வீடு மற்றும் மாடியில் உள்ள மகன்கள் வீடுகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து 23 பவுன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து ராமச்சந்திரன் கொள்ளிடம் போலீ்ஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்