மர்ம விலங்கு கடித்து 23 ஆடுகள் செத்தன
வேட்டவலம் அருகே மர்ம விலங்கு கடித்து 23 ஆடுகள் செத்தன.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த ஜமீன் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 55). இவர், மாங்கொல்லை பகுதியில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஆட்டு பட்டி அமைத்து 35-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.சம்பவத்தன்று ஆட்டு பட்டியில் 23 செம்மறி ஆடுகள் செத்து கிடந்ததை பார்த்து ராஜாராம் அதிர்ச்சி அடைந்தார்.
விசாரணையில் மர்ம விலங்கு கடித்து ஆடுகள் இறந்தது தெரியவந்தது. பின்னர் கால்நடை மருத்துவர், ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தார். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி ஆடுகள் புதைக்கப்பட்டன.