வீட்டில் பதுக்கிய 220 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருச்சுழி அருகே வீட்டில் பதுக்கிய 220 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
காரியாபட்டி,
திருச்சுழி அருகே வீட்டில் பதுக்கிய 220 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள்
திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருச்சுழி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் தமிழ்பாடி, ஒத்தவீடு பகுதிக்கு சென்றனா். அப்போது சந்தேகத்தின் பேரில் ஆறுமுகம் என்பவரின் வீட்டை தனிப்படை போலீசார் சோதனை செய்தனர்.
வாலிபர் கைது
அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 220 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த ஆறுமுகம் (வயது 33) என்பவரை திருச்சுழி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.