ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினர் 22 பேர் கைது
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினர் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப்போவதாக கரூர் மாவட்ட ஆதித்தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஆதித்தமிழர் கட்சியினர் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை கொண்டு வந்த போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதனை கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்த 10 பெண்கள் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.