அனைத்து ரெயில்களையும் இயக்கக்கோரி 22-ந்தேதி ஆர்ப்பாட்டம்

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் இயக்கக்கோரி 22-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய வர்த்தக தொழிற்குழும கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-17 16:30 GMT

நாகையில் இந்திய வர்த்தக தொழிற்குழும அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் சலீமுதீன் தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், வர்த்தக தொழில் குழும துணைத்தலைவர் சேகர், இணை செயலாளர் பகுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய அளவில் கடந்த 2 ஆண்டு காலமாக பல புதிய ரெயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால் தெற்கு ரெயில்வே சார்பில் எந்த புதிய ரெயில் சேவைகளும் தொடங்கப்படவில்லை.கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் உடனே இயக்க வலியுறுத்தி வருகிற 22- ந்தேதி (புதன்கிழமை) அனைத்து சேவை சங்கங்கள் சார்பில் நாகை இந்திய வர்த்தக தொழிற்குழும அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நாகை ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க தலைவர் பாஷ்யம், செயலாளர் செயலாளர் அரவிந்குமார், வணிகர் சங்க தலைவர் குகன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்