ஆஸ்பத்திரியை முற்றுகையிட்ட 21 பேர் கைது

ஆஸ்பத்திரியை முற்றுகையிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-20 20:32 GMT

சிவகாசி, 

சாத்தூர் பஸ் நிலையம் அருகில் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் ஒத்தையால் கிராமத்தை சேர்ந்த நாகலட்சுமி என்பவர் நர்சாக வேலை செய்து வந்தார். அவரை அதே ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த ரகுவீர் என்பவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் ரகுவீரை கைது செய்தனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரி நிர்வாகி கிருஷ்ணவேணியை கைது செய்ய கோரி தலித் விடுதலை இயக்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கருப்பையா (வயது60) என்பவர் உள்பட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்