மது விற்ற 21 பேர் கைது

மது விற்ற 21 பேர் கைது

Update: 2023-05-23 18:45 GMT

நாகர்கோவில்:

தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் திருட்டு மது விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும் படி போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் போலீசார் இரவு, பகலாக தீவிர கண்காணிப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 2 நாட்களில் மாவட்டம் முழுவதும் 21 பேர் மது விற்றதாக கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் சிலரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்