மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 21 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சூதாடிய 11 பேர் சிக்கினர்.
கஞ்சா
சூளகிரி போலீசார் வேளாங்கண்ணி ஆர்ச் அருகில் ரோந்து சென்றனர். அந்த வழியாக சென்ற நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அதில் அவர் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவரது பெயர் ஹரிகுமார் (வயது 29), சூளகிரி அருகே மாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
லாட்டரி சீட்டு
மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை நடைபெறுகிறதா, என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில், லாட்டரி விற்ற சரண்ராஜ் (35), சீனிவாசன் (35), ரமேஷ் (45), முருகன் (54), ஜி.பி. தேவராஜ் (40), ராஜசேகர் (37), ராஜகோபால் (74) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 39 லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சக்திவேல் (47), கபீர் (72), சநதிரகலா (45), சேஷாத்திரி (41), பிரசாந்த் (42), தொன்டப்பா (50), பாலகிருஷ்ணன் (26), முனுசாமி (44), குப்புசாமி (42), செல்வம் (50), நாகராஜ் (41), விஜய் (37), இளையராஜா (46) ஆகிய 13 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ரூ.1,300 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
பணம் வைத்து சூதாட்டம்
மாவட்டத்தில் எங்கும் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் பணம் வைத்து சூதாடியதாக சூளகிரி பகுதியை சேர்ந்த திம்மராயன் (63), சிவக்குமார் (40), சதீஷ்குமார் (32), சத்யராஜ் (32), சங்கர் (35) விஜயகுமார் (38), சக்திவேல் (46), கோவிந்தராஜ் (47), சிலம்பரசன் (26), மணிகண்டன் (24), கோபி (25) ஆகிய 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.