வண்டலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய 21 குரங்குகள் பிடிபட்டன

வண்டலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய 21 குரங்குகளை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.

Update: 2023-10-01 15:08 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட சதானந்தபுரம் திருவள்ளுவர் தெருவில் ஏராளமான குரங்குகள் சுற்றி வந்தன. இந்த குரங்குகள் அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தியது. மேலும் குரங்குகள் திடீரென வீடுகளுக்கு புகுந்து உணவு பொருட்களை திருடி சாப்பிட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீ சீனிவாசனிடம் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் வேளச்சேரியில் உள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று வேளச்சேரியில் இருந்து வந்த வனத்துறை ஊழியர்கள் சதானந்தபுரம் திருவள்ளுவர் தெருவில் குரங்குகளை பிடிப்பதற்காக இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர். கூண்டில் முட்டை மற்றும் பிஸ்கட் துண்டுகளை வைத்தனர். இதனை சாப்பிடுவதற்காக வந்த 21 குரங்குகள் கூண்டில் ஒன்றன்பின் ஒன்றாக சிக்கிக்கொண்டது.

இதைத் தொடர்ந்து பிடிக்கப்பட்ட 21 குரங்குகளை வனத்துறையினர் கொண்டு சென்றனர். இதனால் குரங்குகள் அட்டகாசத்தால் அவதிப்பட்டு வந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்