திருச்சி விமான நிலையத்தில் ரூ.21¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.21¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பயணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2022-11-11 16:49 GMT

திருச்சி விமான நிலையத்தில் ரூ.21¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பயணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பயணிகளிடம் சோதனை

திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, சார்ஜா உள்பட பல்வேறு வெளி நாடுகள் மற்றும் உள்நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. இதனையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தங்கம் பறிமுதல்

இதில் ஜெயபாரத் என்ற பயணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவரை சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, அவர் 404 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அவரிடம் இருந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.21 லட்சத்து 23 ஆயிரம் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்