விதிகளை மீறி செயல்பட்ட 21 நிறுவனங்களுக்கு அபராதம்

விதிகளை மீறி செயல்பட்ட 21 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-12-31 19:14 GMT

திடீர் ஆய்வு

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் சட்டமுறை எடையளவுகள் விதிகளின் கீழ், மீன் மற்றும் இறைச்சிக்கடைகள், கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் கிடங்குகள், பேக்கரி, பால் மற்றும் பால் பொருள்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட், லைட்டர் ஆகியவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி தலைமையில், எடையளவு ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் 59 நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், 21 நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, மேற்கண்ட நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குற்ற நடவடிக்கை

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் மூலம் உரிய உரிமம் பெறாமல் பொட்டலமிட்டு விற்பனை செய்பவர்கள், மின்னணு தராசுகள் உள்பட அனைத்து விதமான எடை அளவைகள் உரிய காலத்தில் மறு முத்திரையிடாமல் பயன்படுத்துபவர்கள், அதிகபட்ச சில்லறை விற்பனைக்கு கூடுதலாக விற்பனை செய்பவர்கள், எடைக்குறைவாக விற்பனை செய்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொட்டலப் பொருள்களில் உரிய விவரங்கள் இல்லாமல் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்