இளையான்குடி அருகே 20-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம்

இளையான்குடி அருகே 20-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.

Update: 2023-09-14 18:45 GMT


இளையான்குடி வட்டம், சூராணம் உள்வட்டம், உதயனூர் கிராமத்தில், வருகிற 20-ந்தேதி காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாமில், அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களை கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெற செய்வதே முகாமின் நோக்கமாகும். எனவே, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்