வத்திராயிருப்பில் 20-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
வத்திராயிருப்பில் 20-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள வத்திராயிருப்பு, கொடிக்குளம், துலுக்கப்பட்டி போன்ற பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வருகிற 20-ந்தேதி வத்திராயிருப்பு, கூமாபட்டி, பிளவக்கல், துலுக்கப்பட்டி, கான்சாபுரம், அர்ச்சனாபுரம், ராமசாமிபுரம், மகாராஜபுரம், கோட்டையூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும். இந்த தகவலை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் சின்னத்துரை அறிவித்துள்ளார்.