தைப்பூசத்தையொட்டி 208 பால்குட ஊர்வலம்
ப.முத்தம்பட்டி ஊராட்சியில் தைப்பூசத்தையொட்டி 208 பால்குட ஊர்வலம் நடந்தது.
திருப்பத்தூர் தாலுகா ப.முத்தம்பட்டி ஊராட்சியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கல்யாண சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. தைப்பூச திருவிழாவையொட்டி வள்ளி தேவசேனா சமேத கல்யாண சிவசுப்பிரமணிய சுவாமிக்கு ஹோமம், 208 பால்குட அபிஷேகம், கலசஅபிஷேகம், ஆராதனை, கணபதி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம் நடைபெற்றது.
குளக்கரை விநாயகர் கோவிலில் இருந்து பம்பை, மேளதாளத்துடன் பக்தர்கள் 208 பால்குடத்துடன் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலைக் சென்றடைந்தனர். அங்கு சாமிக்கு பால் அபிஷேகம், திரவிய அபிஷேகம், கலச அபிஷேகம், ராஜ அலங்கார தரிசனம், மஹா தீபராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று திருப்பத்தூர் தண்டாயுதபாணி கோவில், பசலிகுட்டை முருகன் கோவில், ஜலகாம்பாறை வெற்றிவேல் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தைப்பூச விழாவையொட்டி முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் பால்குட ஊர்வலம், மற்றும் காவடிகளை எடுத்து வந்து வழிபட்டனர்.