தாம்பரம் அருகே சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மேயர், துணை மேயர் நேரில் ஆய்வு
மாடம்பாக்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலம், மருத்துவ பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை,
தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தில், மாநகாட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககந்தீப்சிங் பேடி ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும் அவற்றை அகற்றுவது குறித்தும் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, மாடம்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலம், மருத்துவ பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.