கடைக்கோடி குடிமகனுக்கும் திட்டம் போய் சேர வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்குமான வளர்ச்சி இருக்க வேண்டும்.

Update: 2022-05-18 09:04 GMT
சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில், மாநில அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.  

அப்போது பேசிய முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின்,

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்குமான வளர்ச்சி இருக்க வேண்டும். கடைக்கோடி குடிமகனுக்கும் திட்டம் போய் சேர வேண்டும் என தெரிவித்தார் தமிழகம் முழுவதும் ரூ.6,000 கோடி செலவில் பண்ணை குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் பேசினார். 

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் திறன் வளர்க்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்