கஞ்சா விற்ற 2 பேர் பிடிபட்டனர்

மண்ணாடிப்பட்டில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-17 18:25 GMT
மண்ணாடிப்பட்டு ஏரிக்கரையில் பள்ளி மாணவர்கள்,  இளைஞர் களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் ஏரிக்கரைக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.  விசாரணையில் அவர்கள், மண்ணாடிப்பட்டு பெரிய காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேந்தர் (வயது 24), உருளையன்பேட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஜான்சன் (24) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 88 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்