பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம் - வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டறிக்கை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 26, 27 ஆகிய தேதிகளில் ஆர்பாட்டம் நடைபெறும் என வி.சி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அறிவித்துள்ளன.
சென்னை,
இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசுக்கு பல்வேறு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 26, 27 ஆகிய தேதிகளில் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக அக்கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், நகர்ப்புற வேலை உறுதி சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 25 முதல் 31 ஆம் தேதி வரை வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் விநியோகித்து பரப்புரை மேற்கொள்ள இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.