இனி வரும் காலங்களில் காவல் நிலைய மரணங்களே இல்லாத நிலை ஏற்படும்; முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின்
காவல் நிலைய மரணங்கள் எந்த ஆட்சியில் நடந்தாலும் நியாயப்படுத்த முடியாது, திமுக அரசு எப்போதும், எதையும் மறைக்க முயல்வதில்லை என முதல் அமைச்சர் பேசினார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குழந்தைகள் மீதான குற்றத்தடுப்புகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அமைதியான, பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என நற்பெயர் கிடைத்திருக்கிறது. எங்கோ ஒரு போலீஸ் செய்யும் தவறு ஆட்சிக்கு கறையாக அமையும் என்பதால் கவனமுடன் செயல்பட வேண்டும்.
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையுடன் வந்து காவல்துறையில் புகார் அளிக்கிறார்கள். அரசு எப்போதும் எதையும் மறைக்க முயல்வது இல்லை, லாக்கப் குற்றங்கள் இனி நிகழாது என உறுதியளிக்கிறேன்.
அங்கு ஒன்றும், இங்கு ஒன்றும் நடந்த சம்பவத்தை வைத்து ஒட்டு மொத்த காவல்துறையை குறை கூறக்கூடாது. காவல்துறை யாரும் கைநீட்டி குற்றம் சொல்ல முடியாத துறையாக இருக்க வேண்டும். குற்றங்களே நடக்காத வகையில் சூழலை உருவாக்கித்தருவதே காவல்துறையினரின் பணி.
கஞ்சா, குட்கா போதைப்பொருட்கள் புழக்கம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விநியோகம் செய்பவர்கள், கடத்துபவர்களை கண்காணித்து கைது நடவடிக்கை. குட்கா, போதைப்பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு போலீஸ் அடக்க வேண்டும்.
எந்த போதைப்பொருள் நடமாட்டமும் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பாராமல் அழுத்தம் சிபாரிசுக்கு அடிபணியாமல் போலீஸ் செயல்பட வேண்டும். காவல்துறையினருக்கு வார விடுமுறை அளிக்கப்படுகிறது. காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறவில்லை. சமூக வலைதளங்களில் வன்முறை பேச்சுக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த சூழலிலும் பொதுமக்களுக்கு அச்சம் தரக்கூடிய சம்பவங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் கலவரம் செய்ய நினைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை. காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வக”யில் நடவடிக்கைம். மத மோதலை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூலிப்படைகளின் அட்டகாசத்திற்கு இந்த அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கூலிப்படைகள் விரைவில் முற்றிலும் ஒழிக்கப்படும்’ என்றார்.