ராமேஸ்வரம் கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி நடந்து வருகிறது

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி நடந்து வருகின்றது.

Update: 2022-05-10 05:46 GMT
ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம், ராமநாதசுவாமி திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி.

ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தமும், கோயிலில் அமைந்துள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமியை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்திற்க்கு வருடந்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவர். மேலும் அமாவாசை போன்ற நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

கொரோனா ஊரடங்கை அடுத்து கோயில்கள் திறக்கப்பட்டதை அடுத்து ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.  இந்நிலையில் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி நடந்து வருகின்றது.

மேலும் செய்திகள்