தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
கணவன், மனைவிக்கு இடையே நகை பிரச்சினை தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 41), தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு சூர்யா என்ற மகனும், சுஜித்ரா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே நகை பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இதனால் மனவேதனையில் இருந்த சங்கர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.