“பள்ளிகளின் தரத்தை உயர்த்த ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்” - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் தரத்தை உயர்த்த ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-08 14:32 GMT
கும்பகோணம்,

கும்பகோணத்தில் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இதில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கன பணி ஆணைகளை அவர் வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் தரத்தை உயர்த்த அடுத்த 5 ஆண்டுகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் முதற்கட்டமாக ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 10 ஆயிரம் கட்டிடங்கள் கட்டப்படும் என்றும் கூறினார். 

மேலும் செய்திகள்