நெல்லை காரையார் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

அம்பை அருகே உள்ள காரையார் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.

Update: 2022-05-08 13:45 GMT
நெல்லை,

தென் மாவட்டங்களின் முக்கிய மற்றும் பிரதான நீர் ஆதாரமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் காரையார் அணை விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அணைக்கு வரும் நீர் அளவை விட, அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்து வருகிறது. 

மேலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கோடை காலத்தில் நிலவி வரும் அதிக வெயில் காரணமாகவும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. இதனால் மொத்தம் 143 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 47.20 அடியாக குறைந்துள்ளது. 

மேலும் செய்திகள்