'அசானி' புயல் எதிரொலி: சென்னை, கடலூர், உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

அசானி புயலை ஒட்டி சென்னை, கடலூர், உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Update: 2022-05-08 09:43 GMT
கோப்புப்படம்
சென்னை,

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. 

இது வலுப்பெற்று இன்று புயலாக மாறும் என்றும்,  இதனால் டெல்டா மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கடலூர், நாகை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. 

இந்த நிலையில், புயல் உருவாகுவது குறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இன்று உருவாகும் புயல், ஆந்திரா மற்றும் ஓடிசா நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்