இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த வரம் அன்னை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து...!
அன்னையர் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை,
அன்னையர் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
உயிராய் நமைச் சுமந்து காலமெல்லாம் நனைக்கும் அன்பு மழை அன்னை. அன்பு, ஆறுதல், அரவணைப்பு, ஊக்கம் என மனிதன் ஏங்கும் உணர்வுகளுக்கு அகராதி சொல்லும் முதல் விடை அன்னை. உயிரைத் துளைத்து அன்புக் கடலைப் புகட்டி இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த வரம் அன்னை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது