ரெயிலில் திருடப்பட்ட ரூ.52 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்பு
ரெயிலில் திருடப்பட்ட ரூ.52 லட்சம் மதிப்பிலான பொருட்களை ரெயில்வே போலீசார் மீட்டனர். இந்த பொருட்களை உரியவர்களிடம் நேற்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஒப்படைத்தார்.
சென்னை,
ரெயில் பயணிகளிடம் திருடப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக ரெயில்வே போலீஸ் கூடுதல் இயக்குனர் வனிதா தலைமை தாங்கினார்.
ரெயில்வே பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. சந்தோஷ் என்.சந்திரன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீசாரை பாராட்டினார்.தொடர்ந்து சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற 67 குற்றச்சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.51 லட்சத்து 78 ஆயிரத்து 570 மதிப்பிலான 103.326 பவுன் நகை, 175 செல்போன்கள், 6 லேப்-டாப்கள், 4 லட்சத்து 65 ஆயிரம் ரொக்க பணம், 75 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய ரெயில்வே போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசியதாவது:-
குற்றச்சம்பவம் குறைந்துள்ளது
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 25 லட்சம் பேர் ரெயில்களில் பயணிக்கின்றனர். தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டுகளில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது.தென் மாநில ரெயில்களில், வட இந்திய திருடர்கள், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஒரு வருடங்களில் இது போன்ற குற்றங்கள் நடைபெறவில்லை.
ரெயில் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த போலீசாருக்கு என் பாராட்டுகள். பொதுமக்களிடம் காவல் உதவி செயலியை போலீசார் பிரபலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய ரெயில்வே பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. சந்தோஷ் என்.சந்திரம், ‘மின்சார ரெயிலில் பெண்கள், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட பயணிகளுக்கு திருநங்கைகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடும் திருநங்கைகளை கைது செய்து நீதிமன்ற மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுபோன்று தொடர் சம்பவங்களில் ஈடுபடும் திருநங்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ரெயில்வே போலீஸ், சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பல போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.