தமிழ் பண்பாட்டை சுமப்போம்; மே 22-ல் தருமபுரத்தில் சந்திப்போம் - அண்ணாமலை டுவீட்
தமிழ் பண்பாட்டை சுமப்போம், மே 22-ல் தருமபுரத்தில் சந்திப்போம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
எட்டு வயது சம்பந்தரை எண்பது வயது நாவுக்கரசர் சுமந்தார்.
'பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்!' தமிழ் பண்பாட்டை சுமப்போம். மே 22-ல் தருமபுரத்தில் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
எட்டு வயது சம்பந்தரை எண்பது வயது நாவுக்கரசர் சுமந்தார்.
— K.Annamalai (@annamalai_k) May 5, 2022
'பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்!'
தமிழ் பண்பாட்டை சுமப்போம். May 22 தருமபுரத்தில் சந்திப்போம் 🙏#மே_22தருமபுரம்pic.twitter.com/QFyoDw6v5o