“இந்தியா நம்பர்-1 நாடாக மாற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் செயல்படுகிறார்” - கவர்னர் ஆர்.என்.ரவி
உலகின் நம்பர்-1 நாடாக இந்தியா மாற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை எம்.ஆர்.சி. நகரில் 12-வது இந்திய மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் இன்று தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என்.ரவி, உலகின் நம்பர்-1 நாடாக இந்தியா மாற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாகவும், அதனை அவர், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என கூறி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு உள்ளது என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.