பேராசிரியருக்கு கொலைமிரட்டல் தம்பதி மீது வழக்குப்பதிவு
பேராசிரியருக்கு கொலைமிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி
புதுவை ஜி.என்.பாளையத்தை சேர்ந்தவர் மலர்விஜி. இவர் புதுவை அரசு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது அண்ணனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் இளங்கோ, அவரது மனைவி அனந்தநாயகி ஆகியோர் சேர்ந்து மலர் விஜியை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.