துர்காபூருக்கு புறப்பட்டு சென்றபோது எந்திர கோளாறால் மீண்டும் சென்னையில் தரை இறங்கிய விமானம்

சென்னையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காபூருக்கு புறப்பட்டு சென்ற விமானம், எந்திர கோளாறு காரணமாக மீண்டும் சென்னையில் தரை இறங்கியதால் 184 பேர் உயிர் தப்பினர்.

Update: 2022-05-04 22:00 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காபூருக்கு 178 பயணிகள், 6 ஊழியர்களுடன் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் வானில் பறக்க தொடங்கிய 20 நி மிடங்களில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டு இருந்ததை விமானி கண்டுபிடித்தாா்.

அதேநிலையில் தொடா்ந்து வானில் பறப்பது ஆபத்து என்பதால் இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார்.

அவசரமாக தரை இறங்கியது

இதையடுத்து விமானத்தை மீண்டும் சென்னையில் அவசரமாக தரை இறக்கினார். இதனால் விமானத்தில் இருந்த 178 பயணிகள், 6 விமான ஊழியா்கள் உள்பட 184 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனா். விமான என்ஜினீயர்கள் வந்து எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். விமானம் பழுது பாா்க்கப்பட்ட பிறகு மீண்டும் பயணிகள் ஏற்றப்பட்டு சுமார் 7 மணி நேரம் தாமதமாக துர்காபூருக்கு புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்