புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
புதுவையில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் 9 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவருக்குக்கூட தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. தற்போது 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 52 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 65 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 24 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 89 ஆயிரத்து 244 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.