பிளஸ் 2 தேர்வு நாளை தொடங்குகிறது புதுச்சேரியில் 15 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்

பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது. புதுவை மாநிலத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

Update: 2022-05-03 14:58 GMT
புதுச்சேரி
பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது. புதுவை மாநிலத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

நேரடி வகுப்புகள்

கொரோனா தொற்று பாதிப்பினை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் தேர்வு நடக்கும்போதே 1 முதல் 9-ம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக கல்வித்துறை அறிவித்தது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

ஆனால் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி  வியாழக்கிழமை பிளஸ்-2 தேர்வுகள் தொடங்குகிறது. இம்மாத கடைசியான 28-ந்தேதி தேர்வுகள் நிறைவு பெறுகின்றன. 
இந்த தேர்வை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 14 ஆயிரத்து 647 பேர் எழுதுகின்றனர். இவர்களில் 6 ஆயிரத்து 987 பேர் மாணவர்கள், 14 ஆயிரத்து 647 பேர் மாணவிகள் ஆவர்.
இ்ந்த மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எஸ்.எல்.சி.

இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் வெள்ளிக்கிழமை
தொடங்குகிறது. இந்த தேர்வினை 8 ஆயிரத்து 64 மாணவிகள் உள்பட 16 ஆயிரத்து 831 பேர் எழுதுகின்றனர்.
பிளஸ்-1 தேர்வுகள் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வினை 7 ஆயிரத்து 831 மாணவிகள் உள்பட 15 ஆயிரத்து 174 பேர் எழுதுகின்றனர்.
பிளஸ்-2 தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்