தமிழகத்தில் மே 5ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 7ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-05-03 08:32 GMT
கோப்புப்படம்
சென்னை, 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 7ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், “தமிழகத்தில் இன்று (03-05-2022) கடலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சில மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

நாளை (04-05-2022) தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

நாளை மறுநாள் (05-05-2022) கிருஷ்ணகிரி, தருமபுரி,வேலூர்,திருப்பத்தூர்,சேலம்,திருவண்ணாமலை,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தமான் கடற்பகுதியில் மே 6 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அந்தமான் கடற்பகுதிக்கு செல்ல வேண்டாம்” என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அதில் தெரிவித்துள்ளது.

முன்னதாக வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகின்ற மே 6 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மே 6 -க்கு பிறகு மேலும் தீவிரமடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்