அட்சய திருதியை தினம்: இன்றைய தங்கம் விலை நிலவரம்...!
அட்சய திருதியை தினமான இன்று ஏராளமானோர் நகை வாங்க நகைக்கடைகளில் குவிந்து வருகின்றனர்.
சென்னை,
அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமல்ல எது வாங்கினாலும் அது மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை ஆகும். அந்த வகையில், அட்சய திருதியை தினமான இன்று ஏராளமானோர் நகை வாங்க நகைக்கடைகளில் குவிந்து வருகின்றனர்.
அதிகாலை முதலே தியாகராய நகர், புரசைவாக்கம், அண்ணாசாலை உள்பட சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள அனைத்து நகைக்கடைகலில் பொதுமக்கள் நகை வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ. 4.816-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.67 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.67,000 விற்பனை செய்யப்படுகிறது.