முதல் மனைவி பிரசவத்துக்கு சென்ற நிலையில் 2-வது திருமணம் - போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முதல் மனைவி பிரசவத்துக்கு சென்ற நிலையில் 2-வது திருமணம் செய்த போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொத்தன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருத்தராஜா (வயது 28). இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் முதல் மனைவி பிரசவத்திற்கு சென்றிருந்த போது வேறொரு பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து 2-வது திருமணம் செய்த பெண், ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கருத்தராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மேல்விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரியலூர் போலீசாருக்கு, இந்த வழக்கு மாற்றப்பட்டது.