தனியார் பள்ளி பெண் ஊழியர் தற்கொலை
காலாப்பட்டில் தனியார் பள்ளி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலாப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மனைவி லட்சுமி (வயது 37). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். லட்சுமி காலாப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் உதவியாளராக இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கமலக்கண்ணன் இறந்து விட்டார். இந்தநிலையில் லட்சுமி 6 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்த சேகர் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
கடந்த சில நாட்களாக லட்சுமி இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.