ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்பு தொழுகை....!
காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ஆறுமுகநேரி,
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையில் அல்ஜாமிஉல் அஸ்கர் பெரிய பள்ளிவாசல் மற்றும் ஐ.ஐ.எம் என்கிற இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில் இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது.
பெண்கள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு தொழுகையை பள்ளியின் பேஷ் இமாம் நெய்னா முகமது நடத்தினார். தொடர்ந்து பள்ளியின் கத்தீபு அப்துல் மஜீது மஹ்லரி குத்பா பேருரை ஆற்றினார். அப்போது உலக அமைதியை வேண்டி அனைவரும் பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியின்போது ஏழைகள் நல நிதிக்காக நன்கொடை மூலம் ரூ.2 லட்சத்து 26 ஆயிரமும் வெள்ளி கொலுசு ஒன்றும் திரட்டப்பட்டது.