10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் இன்றுடன் முடிவு
10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது.
சென்னை,
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 25-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் பல கட்டங்களாக தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் 25ம் தேதி துவங்கிய செய்முறைத் தேர்வுகள் இன்றுடன் (2.05.2022) முடிவடைகிறது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.