வெயில் கொடுமையால் தொழிலாளி சாவு
புதுவையில் வெயில் கொடுமையால் தொழிலாளி உயிரிழந்தார்.
புதுவை சோலைநகர் பட்டினத்தார் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 56). இவர் லாண்டரி வேலை செய்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. இந்தநிலையில் நேற்று வீட்டின் மொட்டை மாடிக்கு பாய் எடுக்க சென்றுள்ளார்.
வெகுநேரமாகியும் அவர் கீழே வராததால் உறவினர்கள் வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு பிணமாக கிடந்தார். அவரது பின்தலையிலும் காயம் இருந்தது. உடல் நலம் குன்றியிருந்த அவர் வெயில் தாங்க முடியாமல் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சோலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.