மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி

அரியூர் ஸ்ரீராமச்சந்திரா வித்யாலயா உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-05-01 18:08 GMT
அரியூர் ஸ்ரீராமச்சந்திரா வித்யாலயா உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது, செல்போன் பயன்படுத்துவதில் எல்லை மீறாமல் இருப்பது, ஆசிரியர்கள், பெற்றோர்களை மதித்து செயல்படுவது என மாணவர்களுக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட டாக்டர் ஜெகன் அறிவுறுத்தினார்.
இப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து, கடந்த 2017-18-ம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று டாக்டருக்கு படிக்கும் யசோதா, மாலினி, விக்னேஷ், சுசித்ரா, அபர்ணா, பரத் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.ஆசிரியர்கள் ராணி, மலர்விழி ஆகியோர்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். 
முடிவில் பள்ளி நிர்வாக அலுவலர் ராம்பிரசாத் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்