தமிழகத்தில் மேலும் 47 பேருக்கு கொரோனா- சென்னையில் பாதிப்பு குறைந்தது

சென்னையில் நேற்று 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை 25 ஆக குறைந்துள்ளது.

Update: 2022-05-01 15:00 GMT
கோப்புப் படம் (பிடிஐ)
சென்னை, 

தமிழகத்தில் இன்றைய கொரோனா தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்று புதிதாக 18 ஆயிரத்து 445 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 25 பேரும், பெண்கள் 22 பேரும் உள்பட 47 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 25 பேர் உள்பட 10 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 28 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. இதுவரை 34 லட்சத்து 53 ஆயிரத்து 979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 45-வது நாளாக  கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

மேலும் இன்றைய நிலவரப்படி 514 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 46 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்