வேலூரில் அதிகபட்சமாக இன்று 42.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு

வேலூரில் அதிகபட்சமாக இன்று 42.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-05-01 12:52 GMT
கோப்புப்படம்
சென்னை,

தமிழகத்தில் மதிய வேளைகளில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. 

இந்த நிலையில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக வேலூரில் இன்று 42.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும், மேலும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பம் அதிகம் இருக்கும் காரணத்தினால், மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்