பல்லடம் அருகே ஜீப்-ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு...!
பல்லடம் அருகே ஜீப்-ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.
பல்லடம்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஜீப்பும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் பெண்கள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்.
பெங்களூருரில் இருந்து வால்பாறை நோக்கி சென்ற ஜீப்பும், கிணத்துக்கடவில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற ஆம்னி வேணும் பல்லடம் வெங்கிட்டாபுரம் பிரிவு அருகே இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவத்தில் ஆம்னி வேனில் பயணித்த திருப்பூரை சேர்ந்த கார்த்திகேயன், கார்மேகம் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
மேலும் நான்கு பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியோடு அப்பளம் போல நொறுங்கி கிடந்த ஆம்னி வேனில் சிக்கி இருந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் பலியான கார்த்திகேயன் மற்றும் கார்மேகம் ஆகிய இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.