சுற்றுப்பயணத்தை முடித்து ஊட்டியில் இருந்து புறப்பட்ட தமிழக கவர்னர்...!
ஒருவார சுற்றுப்பயணத்தை முடித்து ஊட்டியில் இருந்து தமிழக கவர்னர் ஆர்.என். ரவி புறப்பட்டு உள்ளார்
ஊட்டி,
தமிழக கவர்னர் ஆர்.என் ரவி ஒரு வார சுற்றுப் பயணமாக கடந்த 23-ந் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டி வந்தார். இதைத்தொடர்ந்து ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
இதை எடுத்து 28-ந் தேதி முன்னாள் ராணுவத்தினருடன் கலந்துரையாடினார். இந்த நிலையில் இன்று சுற்றுப்பயணம் முடிந்து மீண்டும் சென்னை திரும்பினார். இதற்காக ஊட்டி ராஜ்பவன் இருந்து காலை 11.30 மணியளவில் கவர்னர் ஆர்.என்.ரவி சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
இதையொட்டி ஊட்டி கோத்தகிரி சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டடு இருந்தது.