சென்னை ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!

சென்னை ஐஐடியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 196 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-30 07:19 GMT
கோப்புப்படம்
சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 19-ந் தேதி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், ஊழியர்கள் என 7 ஆயிரத்து 300 பேரின் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் தற்போது வரத்தொடங்கியுள்ளது. இதனால், அங்கு பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதன்மூலம் ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 196 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு 141 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்