சர்வ அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்....!
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் அமைந்து உள்ள ராமநாதர் கோவிலில் அமாவாசை நாட்களில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இந்த நாட்களில் வழக்கத்தை விட வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில் சித்திரை மாதத்தின் சர்வ அமாவாசையான இன்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனி நீராடுவதற்காக பக்கர்கள் காலை முதலே கடற்கரையில் குவிந்து வந்னர்.
கடற்ரைக்கு வந்த பக்தர்கள் தங்கள் முன்னேர்களுக்கு தர்பணம் கொடுத்துவிட்டு, கடலில் புனித நீராடி வந்தனர். பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் கடற்ரை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.