முரசொலி நிலம் குறித்து பேச்சு: அவதூறு வழக்கில் மத்திய மந்திரி எல்.முருகன் ஆஜராக விலக்கு
முரசொலி நிலம் குறித்து பேச்சு: அவதூறு வழக்கில் மத்திய மந்திரி எல்.முருகன் ஆஜராக விலக்கு ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
மத்திய மந்திரி எல்.முருகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக இருந்தபோது, வேலூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், அதற்கான மூலப்பத்திரத்தை காட்ட முடியுமா? என்றும் பேசினார். அவரது பேச்சு அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாக கூறி முரசொலி அறக்கட்டளை நிர்வாகியான ஆர்.எஸ்.பாரதி, அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வருகிற மே 2-ந் தேதி நேரில் ஆஜராகும்படி எல்.முருகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு தடை கேட்டும், நேரில் ஆஜராக விலக்கு கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் எல்.முருகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் எல்.முருகனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார். எல்.முருகன் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார். மனு மீதான விசாரணையை ஜூன் 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.